/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் நர்சிங் நுழைவு தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம்
/
சென்டாக் நர்சிங் நுழைவு தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம்
சென்டாக் நர்சிங் நுழைவு தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம்
சென்டாக் நர்சிங் நுழைவு தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம்
ADDED : மே 16, 2025 02:26 AM
புதுச்சேரி: சென்டாக் நர்சிங் நுழைவு தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லுாரிகளில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு புதுச்சேரி நர்சிங் கவுன்சில் நடத்தும் பொது நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே பங்கேற்க முடியும்.
இந்த தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் நேற்று முதல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி நர்சிங் நுழைவு தேர்வினை புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே எழுத முடியும். முதலில் சென்டாக் இணையதளத்தில் நீட் அல்லாத விண்ணப்பத்தை சமர்பித்து யூ.ஜி., நான் நீட் விண்ணப்ப எண் பெற வேண்டும். பிறகு அதே யூ.ஜி./, நான் நீட் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு சென்டாக் இணைய தளத்திலேயே புதுச்சேரி நர்சிங் பொது நுழைவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் வரும் 30ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
சுய நிதி இடங்கள், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு பி.எஸ்சி., இடங்கள் நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும்.
இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் உள்ள சுய நிதி இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் மதர் தெரசா முதுநிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சுயநிதி, என்.ஆர்.ஐ., இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் யூ.ஜி., நான் நீட் விண்ணப்பத்தை சென்டாக் இணையதளத்தில் நிரப்ப வேண்டும்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின் நீட் மதிப்பெண்ணை பதிய தனி இணைப்பு விண்ணப்பதாரரின் டேஷ்போர்ட்டில் வழங்கப்படும்.
இதே கல்வி நிறுவனங்களில் உள்ள சுயநிதி இடங்களுக்கு புதுச்சேரி மாணவர்களுடன் மாற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
மேலும் விபரங்களுக்கு 0413-2655570 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.