/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
/
256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மார் 15, 2024 05:53 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறைகளில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பாமல் உள்ள 256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு வரும் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என நிர்வாக சீர்த்திருத்த துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அமைச்சக பதவிகளில் அசிஸ்டண்ட் எனப்படும் 1135 உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 20 சதவீதம் நேரடி நியமனமாகவும், 20 சதவீதம் துறை ரீதியாக லிமிடெடு தேர்வு நடத்தியும், 60 சதவீதம் பதவி உயர்வு கொடுத்தும் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப் - பி அரசிதழ் பதவி இல்லாத அசிஸ்டண்ட் பணியிடங்களை போட்டி தேர்வு மூலம் நேரடியாக நிரப்ப நிர்வாக சீர்திருத்த துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக காலியிட அறிவிப்பு, கல்வி தகுதி,தேர்வு நடக்கும் வழிமுறைகள், விண்ணப்ப படிவம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் https://recruitment.py.gov.in மற்றும் https://dpar.py.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதி வெளியிடப்படும்.
அன்றைய தினத்தில் இருந்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 24ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு அசிஸ்டண்ட் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நடக்க உள்ளது டிகிரி படித்த பட்டதாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

