/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் வரி செலுத்த 'ஆன்லைன்' வசதி
/
குடிநீர் வரி செலுத்த 'ஆன்லைன்' வசதி
ADDED : ஜன 04, 2025 04:57 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் குடிநீர் வரி உள்ளிட்டவைகளை பொதுமக்கள் ஆன்லைனில் செலுத்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் குடிநீர் இணைப்பு, கணக்கீடு, வரி வசூல், கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு இணையதள சேவை துவங்கப்பட்டுள்ளது. இது முழு யூனியன் பிரதேசத்திற்கும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவதற்கான மையப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். இதன் மூலம் பொதுமக்கள் குடிநீர் கட்டணங்களை எங்கிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் செலுத்தலாம்.
அதேபோல புதிய இணைப்பிற்கும் எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் தினசரி குடிநீர் வரி கட்டண வசூல், பிரிவு வாரியாக குடிநீர் வரி கட்டண வசூல், கவுண்ட்டர் மற்றும் ஆன்லைன் அடிப்படையில் குடிநீர் வரி கட்டண வசூல் ஆகியவற்றை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

