/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் மோசடி கும்பல் 8 பேரிடம் ரூ.2.34 லட்சம் மோசடி
/
ஆன்லைன் மோசடி கும்பல் 8 பேரிடம் ரூ.2.34 லட்சம் மோசடி
ஆன்லைன் மோசடி கும்பல் 8 பேரிடம் ரூ.2.34 லட்சம் மோசடி
ஆன்லைன் மோசடி கும்பல் 8 பேரிடம் ரூ.2.34 லட்சம் மோசடி
ADDED : நவ 12, 2024 07:20 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 8 பேரிடம், ஆன்லைன் மோசடி கும்பல் ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் ஏமாற்றியுள்ளது.
புதுச்சேரி, ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர் ஹரி குமார். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, கிரெட்டி கார்டு விவரங்களை கேட்டுள்ளார். ஹரி குமார், கிரெட்டி கார்டு விவரங்களை தெரிவித்ததுடன், அவருக்கு வந்த ஓ.டி.பி., நம்பரையும் கூறியுள்ளார். அதன்பின், ஹரிகுமார் கிரெட்டி கார்டில் இருந்து மர்ம நபர் ரூ. 30 ஆயிரத்து 899 எடுத்து ஏமாற்றியுள்ளார்.
ஆன்லைனில் வேலை தேடிவந்த மூலக்குளத்தை சேர்ந்த ரேவதியிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகளவு சம்பாதிக்காலம் எனக் கூறி அவரிடமிருந்து ரூ. 1 லட்சத்து 32 ஆயிரதை மொசடி செய்துள்ளனர்.
இதேபோல், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஹேமா ராதாகிருஷ்ணன் ரூ.49 ஆயிரத்து 500, புதுச்சேரியை சேர்ந்த சீதராசன் ஆன்லைனில் லாட்டரி சீட் வாங்கி ரூ. 5000, வைத்திகுப்பத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் ரூ.10 ஆயிரம், காந்தி நகரை சேர்ந்த உதயக்குமார் ரூ.2,300, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சபரி ரூ.2,000, காராமணிக்குப்பத்தை சேர்ந்த ராம்குமார் ரூ.3,000 என மொத்தம் 8 பேர், ஆன்லைன் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 699 ரூபாயை இழந்துள்ளனர்.
இது குறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.