/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருமாம்பாக்கத்தில் படிப்பகம் திறப்பு
/
கிருமாம்பாக்கத்தில் படிப்பகம் திறப்பு
ADDED : ஆக 14, 2025 11:52 PM

பாகூர்: பிரான்ஸ் தமிழர்கள் சமூக சேவை அமைப்பு சார்பில், கிருமாம்பாக்கத்தில் ரூ.2 லட்சம் செலவில், படிப்பகம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
கிருமாம்பாக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு துவங்கப்பட்ட நற்பணி மன்றத்தின் மூலம் அப்பகுதி இளைஞர்கள் பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்றனர்.
அதனை அங்கீகரிக்கும் வகையில் பிரான்ஸ் தமிழர்கள் சமூக சேவை அமைப்பு (எப்.டி.எஸ்.எஸ்.) சார்பில், படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்புக்கு தங்களை தயார் படுத்தி கொள்வதற்காக ரூ.2 லட்சம் செலவில் கிருமாம்பாக்கத்தில் படிப்பகத்தை அமைத்து கொடுத்துள்ளது.
இப்படிப்பக திறப்பு விழா நடந்தது. விழாவில், பிரான்ஸ் தமிழர்கள் சமூக சேவை அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஆல்லீஸ் படிப்பகத்தை திறந்து வைத்தார்.
விழாவில், அறிவுடை நம்பி, சிறுபான்மை நலக்குழு உறுப்பினர் போதிச்சந்திரன், லெனின், புண்ணியக்கோடி, புனிதசீலன், கோபி, மார்கண்டன், சப் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சரவணன், சக்திவேல், சிவரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நற்பணி மன்றத்தின் மூலம் நடத்தப்பட்ட போட்டி தேர்வு வகுப்பில் பயிற்சி பெற்று, அரசு பணியில் சேர்ந்துள்ள அருணகிரி, பாஸ்கர், பிரேம்நாத், மணிகண்டன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
பீமாராவ் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் கலைவாணன் நன்றி கூறினார்.