sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சோரியாங்குப்பம் சுடுகாட்டிற்கு மேம்பாலம் திறந்து வைப்பு

/

 சோரியாங்குப்பம் சுடுகாட்டிற்கு மேம்பாலம் திறந்து வைப்பு

 சோரியாங்குப்பம் சுடுகாட்டிற்கு மேம்பாலம் திறந்து வைப்பு

 சோரியாங்குப்பம் சுடுகாட்டிற்கு மேம்பாலம் திறந்து வைப்பு


ADDED : மார் 07, 2026 05:29 AM

Google News

ADDED : மார் 07, 2026 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்.: சோரியாங்குப்பம் சுடுகாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

பாகூர் தொகுதி சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை, குருவிநத்தம் ஆகிய கிராமங்களுக்கான சுடுகாடு, சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் நடுக்கரையில் உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு, கிளை ஆற்றை கடந்து செல்ல வேண்டும். மழை காலங்களில், ஆற்றை கடந்து சுடுகாட்டிற்கு செல்வது சிரமமாக இருந்தது. ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

இது குறித்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில், 1.49 கோடி ரூபாய் செலவில், கிளை ஆற்றின் குறுக்கே சுடுகாட்டிற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பாலத்தை திறந்து வைத்தார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us