/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிழக்கு மாவட்ட காங்., அலுவலகம் திறப்பு
/
கிழக்கு மாவட்ட காங்., அலுவலகம் திறப்பு
ADDED : ஜூன் 17, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் கிழக்கு மாவட்ட காங்., கமிட்டி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் காங்., அலுவலகத்தை திறந்து வைத்தனர்.விழாவில், வட்டாரத் தலைவர்கள் ஜெரால்டு, ராஜ்மோகன், நிர்வாகிகள் இளையராஜா, சிலம்பரசன், குமரன், ராஜாராம், வேல்முருகன், ஆறுமுகம், ரமேஷ், லட்சுமணன், பஞ்சகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.