/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆப்பரேஷன் சிந்துார் ராணுவ வீரர்கள் கவுரவிப்பு
/
ஆப்பரேஷன் சிந்துார் ராணுவ வீரர்கள் கவுரவிப்பு
ADDED : டிச 05, 2025 07:06 AM
புதுச்சேரி: புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்கத்தின் ஆண்டு விழா வரும் 7ம் தேதி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
விழாவில் கடந்த மே மாதம் 7ம் தேதி நடைபெற்ற ஆப்பரேஷன் சிந்துாரில் கலந்து கொண்ட புதுச்சேரி ராணுவ வீரர் ஹவில்தார் கமலநாதன் கவுரவிக்கப்பட உள்ளார்.
மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள், வீரத் தாய்மார்களின் வாரிசுகளுக்கு கல்வி ஊக்கத் தொகை உட்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
விழாவில், தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் அகில இந்திய தலைவர் லிங்களா ஜெகன் ரெட்டி, தென்மண்டல தலைவர் மகாராஜன், லினோவோ இந்தியா கம்பெனியின் மூத்த மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

