/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'புதுச்சேரியில் ஆபரேஷன் திரிசூல்' 56 பேர் அதிரடி கைது
/
'புதுச்சேரியில் ஆபரேஷன் திரிசூல்' 56 பேர் அதிரடி கைது
'புதுச்சேரியில் ஆபரேஷன் திரிசூல்' 56 பேர் அதிரடி கைது
'புதுச்சேரியில் ஆபரேஷன் திரிசூல்' 56 பேர் அதிரடி கைது
ADDED : மார் 21, 2024 12:33 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் 'ஆபரேஷன் திரிசூல்' மூலம் நடந்த சோதனையில் ரவுடி மற்றும் குற்றப்பின்னணி கொண்ட56 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலையொட்டி, பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு அளிப்பதை உறுதி செய்ய ரவுடிகள், குற்றப்பின்னணி கொண்டவர்கள் நடவடிக்கையை கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து ஆபரேஷன் திரிசூல் பெயரில் நேற்று பல்வேறு இடங்களில் போலீசார்திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.கிழக்கு பகுதி ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வாணரப்பேட், கண்டாக்டர் தோட்டம் உள்ளிட்ட பகுதியில் சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா, எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், ஜெய்சங்கர்உள்ளிட்டோர் ரவுடிகளின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரவுடி மற்றும் குற்றப்பின்னணி கொண்ட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
வடக்கு பகுதியில் ரெட்டியார்பாளையம், கோரிமேடு, கருவடிக்குப்பம் பகுதியில் எஸ்.பி. வீரவல்லன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், வெங்கடாசலபதி, சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்டோர் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். வில்லியனுாரில் நடந்த ஆய்வில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெற்கு எஸ்.பி. பக்தவச்சலம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், சஜித் உள்ளிடோர் நடத்திய சோதனையில், குற்றப்பின்னணி கொண்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான56 பேர் மீதும் 151 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து உறுதிமொழி பத்திரம் சமர்ப்பித்து பின்பு விடுவிக்கப்பட்டனர்.

