/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கான்ஸ்டபிள் தேர்வு தேதியை மாற்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
/
கான்ஸ்டபிள் தேர்வு தேதியை மாற்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
கான்ஸ்டபிள் தேர்வு தேதியை மாற்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
கான்ஸ்டபிள் தேர்வு தேதியை மாற்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
ADDED : ஜன 31, 2026 05:41 AM

புதுச்சேரி: போலீஸ் கான்ஸ்டபிள் எழுத்து தேர்வை வேறு தேதிக்கு மாற்றக்கோரி டி.ஐ.ஜி.,யிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை மனு அளித்தார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சம்பத், போலீஸ் தலைமையகத்தில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரத்திடம் அளித்த மனுவில், கூறியிருப்பதாவது:
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்துத் தேர்வு வரும் 8ம் தேதி 5 மையங்களில் நடக்கும் எனவும், அதற்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளுமாறு தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.
அதே தேதியில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுத் தேர்வும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கான்ஸ்டபிள் மற்றும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு என, இரண்டிற்கும் விண்ணப்பித்தவர்கள் ஏதாவது ஒரு தேர்வை மட்டுமே எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய தேர்வு வாரியத் தேர்வை தள்ளி வைப்பது சிரமம். ஆனால் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுத் தேதியை மாற்றி அமைக்க புதுச்சேரி அரசால் முடியும். ஆகவே, இரண்டு தேர்விற்கும் விண்ணப்பித்தவர்கள் பாதிக்காத வகையில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வை வேறு ஒரு தேதிக்கு மாற்றி அமைக்க அரசுக்கு தாங்கள் பரிந்துரைச் செய்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
இந்த சந்திப்பின்போது, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், தொகுதி செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

