/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., இல்லம் தேடி அன்பளிப்பு எதிர்க்கட்சி தலைவர் துவக்கி வைப்பு
/
தி.மு.க., இல்லம் தேடி அன்பளிப்பு எதிர்க்கட்சி தலைவர் துவக்கி வைப்பு
தி.மு.க., இல்லம் தேடி அன்பளிப்பு எதிர்க்கட்சி தலைவர் துவக்கி வைப்பு
தி.மு.க., இல்லம் தேடி அன்பளிப்பு எதிர்க்கட்சி தலைவர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 04, 2025 02:23 AM

புதுச்சேரி: தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் ஏற்பாட்டில், நெல்லித்தோப்பு தொகுதியில் 13 ஆயிரம் குடும்பங்களுக்கு இல்லம் தேடி அன்பளிப்பு திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் பிறந்தநாள் விழா, நெல்லித்தோப்பு தொகுதி கீர்த்தி மகாலில் நடந்தது.
தொகுதி செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா, கார்த்திக்கேயன், கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள 13 ஆயிரம் குடும்பங்களுக்கு இல்லம் தேடி அன்பளிப்பு என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, பேசியதாவது;
கார்த்திகேயன் கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தி வெற்றி வாய்ப்பை இழந்தார். அவர் தொடர்ந்து தொகுதி மக்களுக்கு ஆற்றிவரும் பணி அளப்பரியது.
மின்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி உள்ளிட்ட அடிப்படை பணிகளை உடனுக்குடன் முடித்துக்கொடுத்து மக்களின் பாராட்டை பெற்றவர்.
முதியோர், விதவை உதவித் தொகை பெற்று தந்து ஒரு எம்.எல்.ஏ., செய்ய வேண்டிய பணிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். இவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகசாக உள்ளது' என்றார்.
விழாவில், மாநில அவைத் தலைவர் சிவகுமார், தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள்., அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்., நந்தா சரவணன், மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.