/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்சூலின் ஊசி தரமில்லாமல் உடைந்து உடலில் சிக்கி கொள்கிறது எதிர்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு

ADDED : செப் 28, 2024 04:26 AM

புதுச்சேரி : தரமற்ற இன்சூலின் ஊசி செலுத்துவதால், உடைந்து ஊசி உடலுக்குள் சிக்கி கொள்வதாக எதிர்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த எதிர்கட்சி தலைவர் சிவாவிடம், அங்கிருந்த வில்லியனுார் தொகுதியைச் சேர்ந்த நபர், தனக்கு நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசி போடும்போது, ஊசி உடைந்து உடலுக்கு சென்று விட்டது.
அதனை ஆப்ரேஷன் செய்து வெளியே எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியதாக தெரிவித்தார்.
அப்போது சிவா கூறுகையில்; கையில் இன்சூலின் போடும்போது உடைந்து விடுகிறது என தொப்பிலில் ஊசி போடுகின்றனர். அப்போதும் ஊசி உடைந்து விடுகிறது.
தரமற்ற ஊசி என அரசிடம் பல முறை கூறியும் இதுபோன்ற ஊசிகளை வாங்கி கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத் தில், மக்களுக்கு கொடுக்கின்றனர் என குற்றம் சாட்டினார்.