/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
100 நாள் வேலை திட்டத்தில் அரசுக்கு கடந்த 5 ஆண்டில் ரூ. 1423 கோடி இழப்பு எதிர்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு

ADDED : டிச 25, 2025 05:16 AM
புதுச்சேரி: நுாறு நாள் வேலை திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கு கடந்த ஐந்து ஆண்டில் 1,423 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய பா.ஜ., அரசை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில், வில்லியனுாரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது; தேசிய ஊரக வேலை உறுயளிப்புத் திட்டம் 2005ம் ஆண்டு, காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, 2009ல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டம் கிராமப்புற ஏழை மக்களுக்கு சிறந்த முறையில் செயல்பட்டு வந்தது. ஒன்றியத்தில், பா.ஜ., ஆட்சி அமைந்ததில் இருந்து இத்திட்டத்திற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தனர்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புதுச்சேரியில் இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு வெறும் 23 நாட்கள் மட்டுமே வேலை நடந்துள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் 176 கோடி ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. இத்திட்டத்தில், புதுச்சேரி மாநிலத்திற்கு 1,423 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் 100 நாள் திட்டத்திற்கான பணத்தை கொடுக்காமல் அவர்கள் வயிற்றில் அடிக்கும் பாவம் சும்மா விடாது என்றார்.''