ADDED : டிச 25, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 30ம் தேதி நடக்கிறது.
நெட்டப்பாக்கம் அடுத்த வடுகுப்பம் கிராமத்தில் உள்ள பத்மாவதி தாயார் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு வரும் 30ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, வரும் 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு சுவாமிக்கு வைகுந்த வாச அலங்காரம் செய்யப்பட்டு, திரை மூடப்படுகிறது. தொடர்ந்து, மறுநாள் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு மேல் சொர்க்க வாசல் (பரமபத வாசல்) திறப்பு விழா நடக்கிறது.

