/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு ஜிப்மர் பணியிடங்களில் 50 சதவீதம் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

ADDED : ஜூலை 04, 2025 02:24 AM
புதுச்சேரி:ஜிப்மரில் உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு பணியிடங்களில் 50 சதவீதத்தை புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை;
புதுச்சேரியில் உள்ள ஜிப்பமர், பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படுவதில்லை.
அனைத்து வேலைகளும் வெளி மாநிலத்தவர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது.தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஜிப்மரில் 36 சீனியர் உள்ளிருப்பு மருத்துவர்கள், 50 ஜூனியர் உள்ளிருப்பு மருத்துவர்கள், 400 செவிலியர்கள் உள்ளிட்ட 557 பணியிடங்களை உருவாக்க அனுமதி அளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிப்மரில் சுமார் 400 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டபோது 90 சதவீதம் பேர் கேரளா மாநிலத்தவர்.
இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க புதுச்சேரி அரசு உடனடியாக ஜிப்மரில் உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு பணியிடங்களில் 50 சதவீதத்தை புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
ஜிப்மரில் உள்ள நான்காம் நிலை பணிக்கான ஊழியர்களை நிரந்தமாக நியமிக்கவும், அதில் 75 சதவீத பணிகளை புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.