/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை எதிர்க்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தல்

ADDED : செப் 25, 2024 04:22 AM

புதுச்சேரி, : வேகமாக பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மாநிலத்தில் சுகாதாரத் துறை துாங்கிக் கொண்டுள்ளதால், கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
நேற்று வரை புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்குன் குனியாவிற்கு 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை இயக்குநராக இருந்த ஸ்ரீராமுலு பதவிகாலம் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் இன்னும் அத்துறைக்கு முழுமையான இயக்குநர் நியமிக்கவில்லை. முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத் துறைக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருப்பது துரதிஷ்டவசமானது.
நோய் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் சேவை 13 ஆண்டுகளை கடந்தும் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பராமரிக்கவும், புதிய வாகனங்கள் வாங்கவும் சுகாதாரத்துறை முயற்சிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.