/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரசாயன தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு
/
ரசாயன தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு
ரசாயன தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு
ரசாயன தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு
ADDED : ஏப் 12, 2025 10:12 PM

காரைக்கால் : காரைக்காலில் தனியார் ரசாயன தொழிற்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
காரைக்கால், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து வாஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சாலை விரிவாக்க பணிகளை நிறுத்த வேண்டும் என, வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநில அரசு மாசு கட்டுப்பாடு குழு சார்பில், சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் முன்னிலையில் தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்படுத்துவது மற்றும் விரிவாக்க பணிகள் குறித்து பொது மக்களிடையே கருத்துக்கேட்பு கூட்டம் கடந்த 10ம் தேதி நடந்தது.
ரசாயன தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சாலை செயல்பட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே கிராம மக்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.