/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய் வழி புற்றுநோய் பரிசோதனை முகாம்
/
வாய் வழி புற்றுநோய் பரிசோதனை முகாம்
ADDED : பிப் 28, 2026 05:05 AM

பாகூர்: பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய வாய் வழி நோயியல் நிபுணர் தினத்தையொட்டி வாய் வழி புற்றுநோய் பரிசோதனை முகாம் நடந்தது.
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லுாரி ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆனந்தவேல் முகாமை துவக்கி வைத்தார். வாய் வழி நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் சாந்தாதேவி பேசினார்.
நிகழ்ச்சியில், டாக்டர் வேழவேந்தன், வித்யாலட்சுமி, உமா மகேஸ்வரி, சிவராமகிருஷ்ணன், ஜோஸ் வினோதினி மற்றும் முதுநிலை மாணவர்கள் பங்கேற்றனர். நோயாளிகளுக்கு வாய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வாய்வழி சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பல் மருத்துவ பிரிவில் இயங்கி வரும் புகையிலை கட்டுப்பாட்டு மையத்தை அணுகி தீர்வு காணலாம் என, அறிவுறுத்தப்பட்டது.
டாக்டர் தேவி நன்றி கூறினார்.

