
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாய் மற்றும் பல் நோய் கண்டறியும் முகாம் நடந்தது.
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடந்த முகாமில், சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஆனந்தவேலு தலைமை தாங்கினார்.
குழந்தைகள் நல மருத்துவர் கந்தன், நாகராஜ் மற்றும் வாய் புற்று நோய் மருத்துவ நிபுணர் வித்யாலட்சுமி, வாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.
சுகாதார நிலையத்தின் பல் மருத்துவர் தேவி 'வாய் மற்றும் பல் நோய் குறித்து பேசினார். தொடர்ந்து, பொது மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் சந்தேங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

