/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விரைவில் எஸ்.பி.,க்கள் இடமாற்றல் உத்தரவு
/
விரைவில் எஸ்.பி.,க்கள் இடமாற்றல் உத்தரவு
ADDED : அக் 31, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி போலீசில் எஸ்.பி.க்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் டி.ஐ.ஜி., சீனியர் எஸ்.பி.க்களான ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் புதிய பொறுப்புகள் வழங்கியதுடன், இடமாற்றமும் செய்யப்பட்டனர். ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் இடமாற்றல் தொடர்ந்து, எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நவ. 10ம் தேதிக்குள் இடமாற்றல் உத்தரவு வெளியாகலாம் என போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.