/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்வில் அதிக மதிப்பெண் பெற லட்சுமி ஹயக்ரீவருக்கு அர்ச்சனை
/
தேர்வில் அதிக மதிப்பெண் பெற லட்சுமி ஹயக்ரீவருக்கு அர்ச்சனை
தேர்வில் அதிக மதிப்பெண் பெற லட்சுமி ஹயக்ரீவருக்கு அர்ச்சனை
தேர்வில் அதிக மதிப்பெண் பெற லட்சுமி ஹயக்ரீவருக்கு அர்ச்சனை
ADDED : பிப் 26, 2024 05:04 AM
புதுச்சேரி: பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணன் நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில்,இந்தாண்டு பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மற்றும் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வை முன்னிட்டு, சகஸ்ரநாம அர்ச்சனை நடக்க உள்ளது.
மாணவ - மாணவியரின் கல்வி சிறக்க, லட்சுமி ஹயக்ரீவ பெருமாளுக்கு, சகஸ்ர நாம அர்ச்சனை, பொதுத்தேர்வு நாட்களில் காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. மாணவ, மாணவியர் பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை சங்கல்பம் செய்து, வழிபாடு நடக்கிறது.
இதில் கலந்து கொண்டு அதிக மதிப்பெண், விரும்பும் துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைக்க, வழிபாடு செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை, வேத ஆகம சம்ப்ரக் ஷண லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் செய்து வருகிறது.