/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 02, 2025 07:13 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை இயக்குநர் செவ்வேள் துவக்கி வைத்தார்.
மருத்துவ கண்காணிப்பாளர் ஆத்மநாதன், மதர் தெரேசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் சித்ரா, உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் நோடல் அதிகாரி குமார், இணை இயக்குநர் மணிகண்டன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் மதர் தெரேசா முதுகலை மற் றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், நர்சிங் பள்ளி மற்றும் பாராமெடிக்கல் மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மருத்துவமனை வளாகத்தில் நடந்த கருத்தரங்கில் சென்னை சிம்ஸ் மருத்துவமனையின் சிறுநீரக அறிவியல் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் இயக்குநர் முத்து வீரமணி, சென்னை சவீதா மருத்துவக் கல்லுாரியின் சிறுநீரகவியல் பேராசிரியர் சிவசங்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கடந்த 2024ம் ஆண்டு உறுப்பு தானம் செய்தவர்களின் 6 குடும்பங்களுக்கு சால்வை, நினைவுப் பரிசு மற்றும் தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.