ADDED : ஜன 14, 2026 06:34 AM

புதுச்சேரி: 'இயற்கை வேளாண்மை' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் உருவையாறு சாய்பாபா கோவிலில் நடந்தது.
புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் கீழ் இயங்கும் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவனம், தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் இணைந்து நடத்திய முகாமில், வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். துணை வேளாண் இயக்குநர் சிவசுப்பிரமணியன் முகாமினை துவக்கி வைத்தார்.
வில்லியனுார் கோட்ட துணை வேளாண் இயக்குநர் ராஜ்குமார் வாழ்த்தி பேசினார். அறிவியல் நிலைய தலைவர் ரவி, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தொழில்நுட்ப வல்லுநர் பிரபு இயற்கை விவசாயத்தில் மண் பலத்தின் பங்கு குறித்தும், திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்தும் விளக்கினர்.
பாகூர் கோட்ட துணை வேளாண் இயக்குனர் குமாரவேலு, இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்தும், இயற்கை விவசாயி வெங்கடேஷ், இயற்கை விவசாயத்தை எப்படி லாபகரமாக செய்வது குறித்து பேசினார்.
முகாமில், வில்லியனூர், ஒதியம்பட்டு, திருக்காஞ்சி, மதகடிப்பட்டு, திருக்கனுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் அலுவலர்கள் நடராஜன், தினகரன் ஆகியோர் நன்றி கூறினர்.

