/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
UPDATED : ஜன 14, 2026 06:58 AM
ADDED : ஜன 14, 2026 06:35 AM

வில்லியனுார்: வில்லியனுார் கொம்யூன் தன்னார்வலர் கூட்டமைப்பு சார்பில், அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வெட்டு ஆய்வறிஞர் வெங்கடேசன், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் மீனாட்சிசுந்தரம் , வழுதாவூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் திருமுருகன், கோர்க்காடு அரசுப் பள்ளி துணை முதல்வர் முரளி, திண்டிவனம் அரசுப் பள்ளி ஆசிரியர் வெங்கட்ரமணன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அமரேந்திரன், ஆசிரியர் முருகையன், தன்னார்வலர் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் ராம சிவராஜன், வழக்கறிஞர் சண்முகம், துணைத் தலைவர்கள் காதர்மொய்தீன், லிங்கேஸ்வரன், சங்கர், கார்த்திகேயன், சிலம்பம் ஆசான் குணாளன், மண்வாசம் நிர்வாகிகள் பாலாஜி, பாண்டியன், வீரராகு உள்ளிட்டோர் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினர்.
ஏற்பாடுகளை தன்னார்வலர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்ஜோதி மற்றும் ஆறுமுகம் செய்திருந்தனர்.

