sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மலர் கண்காட்சியில் ஆர்கானிக் பொருட்கள்... முதல் முறை: கொள்முதலுக்கு வெளிநாட்டு வர்த்தகர்கள் வருகை

/

மலர் கண்காட்சியில் ஆர்கானிக் பொருட்கள்... முதல் முறை: கொள்முதலுக்கு வெளிநாட்டு வர்த்தகர்கள் வருகை

மலர் கண்காட்சியில் ஆர்கானிக் பொருட்கள்... முதல் முறை: கொள்முதலுக்கு வெளிநாட்டு வர்த்தகர்கள் வருகை

மலர் கண்காட்சியில் ஆர்கானிக் பொருட்கள்... முதல் முறை: கொள்முதலுக்கு வெளிநாட்டு வர்த்தகர்கள் வருகை


UPDATED : ஜன 30, 2026 05:07 AM

ADDED : ஜன 30, 2026 05:06 AM

Google News

UPDATED : ஜன 30, 2026 05:07 AM ADDED : ஜன 30, 2026 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மலர் கண்காட்சியில் முதல் முறையாக இடம் பெறவுள்ள ஆர்கானிக் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக வெளிநாட்டு வர்த்தகர்கள் பங்கேற்கின்றனர். புதுச்சேரி வேளாண்துறை சார்பில் 35ம் ஆண்டு மலர், காய், கனி கண்காட்சி இன்று மாலை துவங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது.

இந்தாண்டு கண்காட்சியில் புதிய ரகமாக இம்பேஷன், கைலாடியா, பையர்பால் ஆகியவை உள்பட 25 வகை மலர் செடி வகைகளில், 40,000 மலர்செடிகள் காட்சிப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் முதல் முறையாக மலர் கண்காட்சியில் 'ஆர்கானிக்' வேளாண் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும் ஆர்கானிக் விவசாயிகளுடன் கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.



அதனைத் தொடர்ந்து'ஆர்கானிக்' பொருட்கள் வாங்குவோர்- விற்போர் சந்திப்பு நடக்கிறது.

இதில், 40 ஸ்டால்களில் இடம் பெறும் ஆர்கானிக் நெல், காய்கறி, தானியங்களை நேரடியாக பார்வையிட்டு கொள்முதல் செய்வதற்காக துபாயில் இருந்து 3 பேர் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 17 பேர் என மொத்தம் 20 வர்த்தகர்கள் முதல் முறையாக புதுச்சேரி மலர் கண்காட்சிக்கு வருகின்றனர்.

உள்நாடு, வெளிநாட்டு வர்த்தகர்கள் கொள்முதல் செய்வதற்கு வருவதால் புதுச்சேரி விவசாயிகள் கண்காட்சியில் கடைவிரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us