/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தலில் கூட்டணி அமைக்க த.வெ.க.,வுடன் பேச்சு வார்த்தை: நமது மக்கள் கழக நிர்வாகிகள் உற்சாகம்

ADDED : ஜன 04, 2026 06:54 AM
வரும் சட்டசபை தேர்தலுக்கு த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் பாஜ., காங்., என்.ஆர்.காங்., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முயற்சித்து வருகின்றன. ஆனால் யாருடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கிறது என, த.வெ.க., தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தனது சொந்த ஊரான புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமியை வாரம் தோறும் சந்தித்து வரும் நிலையில், என்.ஆர்.காங்., உடன் கூட்டணியா, இல்லையா என்ற தெரியாத நிலை தொடர்கிறது.
இந்நிலையில், புதுச்சேரியின் புதிய கட்சியாக உருவாகியுள்ள நமது மக்கள் கழகம் வரும் தேர்தலில் த.வெ.க., கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அதையொட்டி, வரும் தேர்தலில் நமது மக்கள் கழகம், த.வெ.க., முன்னாள் எம்.பி., ராமதாஸின் கட்சியான புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 15 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.