/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குரு சித்தானந்த கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம்
/
குரு சித்தானந்த கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம்
குரு சித்தானந்த கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம்
குரு சித்தானந்த கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம்
ADDED : ஜன 04, 2026 06:54 AM

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜர் மற்றும் சிவகாமி அம்மாள் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமி சுந்தரி சுவாமிகள் மற்றும் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு நேற்று காலை 7:00 மணியளவில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதில், மஞ்சள், பால், தயிர், இளநீர், திருநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகிய அபிேஷகங்கள் நடந்தது.
தொடர்ந்து, சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மேலும், குரு சித்தானந்தா சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.