/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
/
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
ADDED : டிச 27, 2025 05:17 AM
புதுச்சேரி: மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள், நத்தமேடு கிராம விவசாயிகளுக்கு, சிப்பி காளான் வளர்ப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சிக்கு, வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார்.
மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் கணேஷ் ராம், கிரிகரன், ஞானபிரசாத், கோகுல் அழகன், கோகுல்நாத், கவுதமன், ஹரிஹரன், ஹரி சுதன், அயனீஸ்வரன், ஜீவன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிப்பி காளான் வளர்ப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
சேர்மன் முகமத் யாசின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர் மற்றும் திட்ட அலுவலர் செல்வகணபதி ஆகியோர் மேற்பார்வையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
முகாமில், உணவு காளான் எவ்வாறு தயாரிப்பது, அதை எவ்வாறு பதப்படுத்துவது, அதனை மதிப்பு கூட்டுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

