நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., தலைவர் ஓட்டு சேகரிப்பு
நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., தலைவர் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 25, 2026 11:23 PM

புதுச்சேரி: லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நெல்லித்தோப்பு தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாருக்கு, தர்பூசணி சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நெல்லித்தோப்பு தொகுதி, அண்ணா நகரில் வசித்து வரும் ஜெயக்குமார், தேசிய ஜனநாயக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் மாற்று கட்சியில் இருந்து விலகி ல.ஜ.க., கட்சியில் சேர்ந்து வேட்பாளர் ஜெயக்குமாருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நெல்லித்தோப்பு தொகுதி தேர்தல் அலுவலகம் அண்ணா நகரில் திறக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் இளைஞர்கள் மற்றும் தொகுதி முக்கியஸ்தர்களை சந்தித்து ஜெயக்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கத்தை சந்தித்து வேட்பாளர் ஜெயக்குமார் வாழ்த்து பெற்றார்.
அதனை தொடர்ந்து நேற்று காலை பிள்ளைத்தோட்டம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆனந்த முத்து மாரியம்மன் கோவிலில் லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து, தேர்தல் பிரசாரத்தை துவங்கினர்.
நெல்லித்தோப்பு தொகுதி திருவள்ளுவர் சாலையில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வேட்பாளர் ஜெயக்குமாருக்கு, தர்பூசணி சின்னத்தில் கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜ., - என்.ஆர்.காங்., உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
