/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் பெருமாள் கோவிலில் நாளை பகல்பத்து உற்சவம் துவக்கம்
/
வில்லியனுார் பெருமாள் கோவிலில் நாளை பகல்பத்து உற்சவம் துவக்கம்
வில்லியனுார் பெருமாள் கோவிலில் நாளை பகல்பத்து உற்சவம் துவக்கம்
வில்லியனுார் பெருமாள் கோவிலில் நாளை பகல்பத்து உற்சவம் துவக்கம்
ADDED : டிச 19, 2025 05:14 AM
வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து, ராபத்து உற்சவம் நாளை துவங்குகிறது.
வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு நாளை 20ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை 10 நாட்கள் பகல் பத்து உற்சவம் நடக்கிறது. விழாவில் 29ம் தேதி இரவு 9:00 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம், 30ம் தேதி காலை 5:00 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு உற்சவர் பெருமாள் காட்சியளிக்கிறார். அதனை தொடர்ந்து 31ம் தேதி துவங்கி வரும் ஜன., 9ம் தேதி வரை ராபத்து உற்சவம் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு கடந்த 16ம் தேதி துவங்கி, வரும் ஜன., 14ம் தேதி வரை இரவு 7:00 மணி முதல் 8:00 வரை ஒரு மணி நேரம் திருக்கோவிலுார் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் சிஷ்யை சாந்தலட்சுமியின் திருப்பாவை உயன்யாசம் நடந்து வருகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் மற்றும் உற்சவதாரர்கள் செய்கின்றனர்.