ADDED : ஜூலை 15, 2025 09:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; சிறுமியிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்ட பெயிண்டர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ், 45; பெயிண்டர். இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையிலம், 9ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை தனியாக அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்ததை கூறினார்.
அவரது பெற்றோர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், நாகராஜ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து, போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.