/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எலி பேஸ்ட் சாப்பிட்டு பெயிண்டர் தற்கொலை
/
எலி பேஸ்ட் சாப்பிட்டு பெயிண்டர் தற்கொலை
ADDED : பிப் 18, 2026 04:27 AM
புதுச்சேரி: மகளை பார்க்கவிடாத விரக்தியில் தந்தை எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரிஷிகுமார், 27; பெயிண்டர். இவரது மனைவி லயால். இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி லயால் அரியாங்குப்பத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
ரிஷிகுமார் தனது மகளை பார்ப்பதற்காக அரியாங்குப்பத்தில் உள்ள மாமனாரின் வீட்டிற்கு கடந்த 9ம் தேதி சென்றார்.
அங்கு அவரது மனைவி மகளை பார்க்கவிடாமல் தடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ரிஷிகுமார் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

