ADDED : மே 17, 2025 12:26 AM
திருக்கனுார்: சாலையோரம் நிறுத்தியிருந்த டிராக்டர் டிப்பர் மீது பைக் மோதிய விபத்தில் பெயிண்டர் இறந்தார்.
திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரன், 34; பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து, தன்னுடன் வேலை செய்யும் அதேப் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் பி.ஓய். 01 ஏ.யூ. 3710 பதிவெண் கொண்ட பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
விநாயம்பட்டு தனியார் ரெஸ்டோ பார் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டி டிராக்டர் டிப்பர் மீது பைக் மோதி விபத்திற்குள்ளானது.படுகாயமடைந்த சங்கரன் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து, சங்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.