நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பெயிண்டர் துாக்கு போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைனார்மண்டபம் துலுகாத்தம்மன் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் குணசேகர், 36, பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
திருமணமாகாத ஏக்கத்தில், தொடர்ந்து, மது குடித்து வந்தார். வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற நிலையில், நேற்று முன்தினம் வீட்டில், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தாய், சித்ரா கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

