ADDED : ஜன 28, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பூமியான்பேட், பாவானர் நகரை சேர்ந்தவர் முகுந்தன், 42; பெயிண்டர். இவரருக்கு மஞ்சள் காமாலை நோய், இருந்து மது குடித்து வந்தார்.
இதனால் அவரது மனைவி வள்ளி, 41; அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதில் முனமுடைந்த முகுந்தன் வீட்டில் உள்ள மின் விசிறியில் துாக்கிட்டுக்கொண்டார். தகவல் அறிந்த வள்ளி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்ததை உறுதிசெய்தனர்.
புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
