ADDED : அக் 12, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி ஆரோசிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில், பனை விதைகள் நட்டு, அதன் பயன்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாகூர் அடுத்த பின்னாச்சிக்குப்பம் கிராம பகுதியில் 500 பனை விதைகள் நடப்பட்டு, அதன் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைவர், சீனிவாசன், தலைமை தாங்கினார். பனை விதைகள் விதைப்போர் சங்க தலைவர் ஆனந்தன், செயலாளர் கபீர், பொருளாளர் அரிதாஸ், மண்டலத் தலைவர் வடிவேலு, வட்டார தலைவர் வரதராஜன், மாவட்ட தலைவர்கள் ஜனார்த்தனன், பால்ராஜ், முரளி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், பாலு, திருவேங்கடம், லட்சுமி நாராயணன், பாண்டியன், பாலகிருஷ்ணன், ரவி, ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.