தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஞ்சவடீ கோவிலில் நாளை நடை அடைப்பு

 பஞ்சவடீ கோவிலில் நாளை நடை அடைப்பு

 பஞ்சவடீ கோவிலில் நாளை நடை அடைப்பு


ADDED : மார் 02, 2026 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சந்திர கிரகணத்தை முன்னிட்டு, பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை (3ம் தேதி) நடை சாத்தப்படும் என, கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அருகே உள்ள பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை (3ம் தேதி) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனையொட்டி, நாளை கோவில் நடை திறப்பு மற்றும் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் காலசந்தி பூஜைகள் நடக்கும். இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதனைத் தொடர்ந்து காலை 7:30 மணிக்கு அனைத்து சன்னதிகளும் நடை சாத்தப்படும். கிரகண காலத்தின்போது பொது தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

தொடர்ந்து, கிரகண சாந்தி அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதன்பின், இரவு 7:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மீண்டும் இரவு 8:00 மணி க்கு கோவில் நடை வழக்கம்போல் சாத்தப்படும்.

இத்தகவலை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us