/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் பந்தக்கால் முகூர்த்த பூஜை
/
பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் பந்தக்கால் முகூர்த்த பூஜை
பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் பந்தக்கால் முகூர்த்த பூஜை
பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் பந்தக்கால் முகூர்த்த பூஜை
ADDED : பிப் 17, 2025 05:51 AM

புதுச்சேரி; இரும்பை, பாலாதிரிபுர சுந்தரி அம்பாள் கோவிலில் மகா கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, பந்தக்கால் முகூர்த்த பூஜை நேற்று நடந்தது.
புதுச்சேரி அடுத்த இரும்பை புறவழிச் சாலையில் பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், புனரமைக்கப்பட்டு, புதிதாக ராஜமாதங்கி, வராஹி சன்னதி அமைக்கப்பட்டு, மகா கும்பாபிேஷகம் வரும் ஏப்., 7ம் தேதி நடக்கிறது.
கும்பாபிேஷகத்தை முன்னிடடு பந்தக்கால் முகூர்த்த பூஜை நேற்று நடந்தது. காலை பாலாதிரிபுர சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு பந்தக்கால் முகூர்த்த பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் 31ம் தேதி முதல் கும்பாபிேஷகத்திற்கான யாக சாலை பூஜைகள் துவங்கி நடக்கிறது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்டி தலைவர் ராமமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள், கணேசன் சிவச்சார்யார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

