/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 2 நாள் நடமாடும் மக்கள் நீதிமன்றம்
/
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 2 நாள் நடமாடும் மக்கள் நீதிமன்றம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 2 நாள் நடமாடும் மக்கள் நீதிமன்றம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 2 நாள் நடமாடும் மக்கள் நீதிமன்றம்
ADDED : செப் 20, 2011 10:47 PM
புதுச்சேரி : மாநில சட்டப் பணிகள் ஆணையம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து மக்கள் நீதிமன்றத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.
புதுச்சேரியில் முதன்முதலாக நடமாடும் மக்கள் நீதிமன்ற வாகனம் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. இதில் நீதிமன்ற கட்டணம், வழக்கறிஞர் கட்டணம் இன்றி வழக்குகள் உடனடியாக முடிக்கப்படும். இன்று காலை 10 மணிக்கு இந்தியன் ஓவர்சீஸ் நெட்டப்பாக்கம் கிளையில் மக்கள் நீதி மன்றத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. ஐ.ஓ.பி., நெட்டப்பாக்கம் மற்றும் திருபுவனை கிளைகளில் கடன் பெற்ற 91 வாடிக்கையாளர்களுக்கு சட்டப் பணிகள் ஆணையம் நேரில் ஆஜராவதற்கான அழைப்பாணைகள் அனுப்பியுள்ளன. அன்று ஆஜராகும் கடன்தாரர்களுக்கு வட்டித் தொகையில் தகுந்த தள்ளுபடி கொடுக்கப்படும். அதே போல் நாளை 22ம் தேதி காலை 10 மணிக்கு குபேர் சாலையில் (கடற்கரை சாலையில்) உள்ள சட்டப் பணிகள் ஆணைய அலுவலகத்தில் ஐ.ஓ.பி., யின் புதுச்சேரி பிரதான கிளை, முனிசிபல் கேம்பஸ் கிளை, ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை, உருளையன்பேட்டை மற்றும் தவளக்குப்பத்தைச் சேர்ந்த 180 கடன்தாரர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கும் வட்டித் தொகையில் தகுந்த தள்ளுபடி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

