/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நன்னடத்தை விதிகள் குறித்து போலீசாருக்கு பயிற்சி முகாம்
/
நன்னடத்தை விதிகள் குறித்து போலீசாருக்கு பயிற்சி முகாம்
நன்னடத்தை விதிகள் குறித்து போலீசாருக்கு பயிற்சி முகாம்
நன்னடத்தை விதிகள் குறித்து போலீசாருக்கு பயிற்சி முகாம்
ADDED : அக் 09, 2011 12:29 AM
புதுச்சேரி : இடைத் தேர்தலை முன்னிட்டு, போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம், கோரிமேட்டில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளியில் நேற்றுநடந்தது.
தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு, தாசில்தார் யஷ்வந்தையா பயிற்சி அளித்தார். பிரசாரத்தின் போதும், ஓட்டுப் பதிவு நாளன்றும், ஓட்டு எண்ணிக்கையின் போதும் போலீசாரின் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பிரசாரம் முடிகிறதா, மது வினியோகம் உள்ளிட்ட அம்சங்களைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எஸ்.பி.,க்கள் ராமராஜ், ஆறுமுகம், நந்தகோபால், தமிழரசி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.