/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாண்லே நெய், பனீர் விலை உயர்வு
/
பாண்லே நெய், பனீர் விலை உயர்வு
ADDED : நவ 20, 2025 06:03 AM
புதுச்சேரி: பாண்லேவின் உப பொருட்களான வெண்ணை, நெய் மற்றும் பனீர் விலை ரூ.2 முதல் 85 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவமான பாண்லே மூலம் மாநில முழுவதும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலின் உப பொருட்களின் விலை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு: நெய்: 100 மில்லி ரூ.85ல் இருந்து ரூ.90 ஆகவும், 200 மில்லி ரூ.150ல் இருந்து ரூ.170 ஆகவும், 500 மில்லி ரூ.346ல் இருந்து ரூ.390 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.655ல் இருந்து ரூ.740 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வெண்ணை: 200 கிராம் ரூ.150ல் இருந்து 155 ஆகவும், 500 கிராம் ரூ. 272ல் இருந்து ரூ.30 ஆகவும், ஒரு கிலோ ரூ.533ல் இருந்து ரூ.590 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பனீர்: 100 கிராம் ரூ.48ல் இருந்து ரூ.50 ஆகவும், ஒரு கிலோ பனீர் ரூ.400ல் இருந்து ரூ.425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நெய் குறைந்தது 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 85 ரூபாயும், வெண்ணை ரூ. 5 முதல் ரூ.57 வரையிலும், பனீர் ரூ.2 முதல் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

