/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிலிண்டர் தட்டுப்பாடு பீதி மக்கள் திரண்டதால் பரபரப்பு
/
சிலிண்டர் தட்டுப்பாடு பீதி மக்கள் திரண்டதால் பரபரப்பு
சிலிண்டர் தட்டுப்பாடு பீதி மக்கள் திரண்டதால் பரபரப்பு
சிலிண்டர் தட்டுப்பாடு பீதி மக்கள் திரண்டதால் பரபரப்பு
ADDED : மார் 13, 2026 06:28 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நிலவி வரும் சிலிண்டர் தட்டுப்பாடு பீதியால், ரெட்டியார்பாளையம் கனகன் ஏரி பகுதியில் நேற்று சிலிண்டர் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்த சிலிண்டர்கள் லோடு வந்துள்ளதாக தகவல் பரவியது. இதையறிந்த ரெட்டியார்பாளையம், தட்டாஞ்சாவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், நேற்று காலை முதலே ரெட்டியார்பாளையம் கனகன் ஏரி பகுதியில் குவியத் துவங்கினர்.
அங்கு பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய சிலிண்டர்கள் தனித்தனி 'டாடா ஏஸ்' வாகனங்களில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு வரும் டெலிவரி மேன்களிடம் முன்பதிவு எண்களைக் காண்பித்து, தங்களுக்கு வேண்டிய சிலிண்டர்களை அங்கேயே பெற்றுச் சென்றனர்.
சிலிண்டர் தட்டுப்பாடு அச்சம் காரணமாக, பெரும்பாலானோர் 925 ரூபாய் சிலிண்டருக்கு 1,000 ரூபாய் கொடுத்து, சிலிண்டர் கிடைத்தால் போதும் என்ற நிலையில் மீதிச் சில்லரையைக் கூட வாங்காமல் சிலிண்டர்களை எடுத்துச் சென்றனர். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

