ADDED : ஆக 19, 2025 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : சண்முகாபுரம், வி.பி.சிங்., நகரை சேர்ந்தவர் தேவநாதன், 68; ஓய்வு பெற்ற பாண்லே ஊழியர். இவருக்கு, சுமதி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தேவநாதன், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வயிற்று வலி அதிகரித்தால், வீட்டை விட்டு வெளியேறிய தேவநாதன், அருகிலுள்ள நெல்லிக்காய் மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.