UPDATED : அக் 07, 2026 09:35 PM
ADDED : அக் 07, 2026 08:45 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கொடாத்துார், அரசு உயர்நிலைப் பள்ளியில், இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் காகித சிற்ப பயிற்சி பட்டறை நடந்தது.
தலைமையாசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி வரவேற்றார். ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காகிதத்தில் சிற்பம் செய்யும் பயிற்சி அளித்தார். இதில், போர் வீரர், ஆசிரியர், விளையாட்டு வீரர், பள்ளி மாணவர்கள் என பலவிதமான சிற்பங்களை செய்தனர்.
ஓவிய ஆசிரியர் சம்பத்நீஸ் நன்றி கூறினார். ஆசிரியர் வள்ளி தொகுத்து வழங்கினார்.
