தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு நாளை 'ரிசல்ட்': இரண்டு மணி நேரத்தில் வெளியாகும்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு நாளை 'ரிசல்ட்': இரண்டு மணி நேரத்தில் வெளியாகும்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு நாளை 'ரிசல்ட்': இரண்டு மணி நேரத்தில் வெளியாகும்


UPDATED : அக் 08, 2026 05:28 AM

ADDED : அக் 07, 2026 09:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 05:28 AM ADDED : அக் 07, 2026 09:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலின் முடிவுகள் நாளை காலை வெளியாகவுள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில் அசோக் ஆனந்த், காங்., விநாயகம், தி.மு.க., சேதுசெல்வம், இந்திய கம்யூ., சலீம் உட்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. இதில், 10,056 ஆண் வாக்காளர்கள், 11,695 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 21,756 பேர் ஓட்டளித்தனர்.

ஓட்டு சரிவு:: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலின் போது தட்டாஞ்சாவடி தொகுதியில் 87.10 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 80.81 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை விட 6.29 சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளது. இது அரசியல் கட்சியினர் மத்தியிலும் திக்... திக்... மனநிலையை ஏற்றியுள்ளது.

இது வெறும் ஒரு தொகுதி இடைத்தேர்தல் மட்டுமல்ல; மாநிலத்தின் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பலப்பரீட்சைக் களம். இதனால், ஆளும்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை அனைத்து அரசியல் முகாம்களிலும் கடும் பதற்றமும் கலக்கமும் நிலவுகிறது.

இந்தத் தொகுதியில் பெறப்போகும் வெற்றி அல்லது தோல்வி, ஆட்சிக்கு பாதிப்பு இல்லை என்றாலும், அடுத்தகட்ட அரசியல் திசையைத் தீர்மானிக்கும் என்பதால், மூத்த தலைவர்கள் முதல் களப்பணியாளர்கள் வரை அனைவரும் துாக்கமின்றி தவித்து வருகின்றனர்.

எகிறிய எதிர்பார்ப்பு:: தேநீர் கடைகள், பொது இடங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை இப்போது எங்கு பார்த்தாலும் தட்டாஞ்சாவடி தேர்தல் முடிவைப் பற்றிய காரசார விவாதங்களே எதிரொலிக்கின்றன.

ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நாளை (அக்., 9) காலை 8:00 மணிக்கு மோதிலால் நேரு பாலிடெக்னிக் மையத்தில் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அடுத்து மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் நான்கு சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.

முதல் சுற்றில் 8, இரண்டாம் சுற்றில் 8, மூன்றாம் சுற்றில் 8 என முதல் மூன்று சுற்றுகளில் 24 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். மீதமுள்ள 7 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் நான்காம் சுற்றில் இறுதியாக எண்ணப்படும்.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய ஒரே மணி நேரத்திலேயே அதாவது காலை 9 மணிக்கு யார் முன்னணியில் இருக்கிறார் என்ற முதல்கட்ட நிலவரம் தெரிந்துவிடும்.

அதனைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கை வேகமெடுத்து இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே அதாவது காலை 10 மணிக்கு தட்டாஞ்சாவடியில் வெற்றி மகுடம் சூடப்போவது யார் என்ற இறுதி முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும்.

இதனால், களத்தில் நிற்கும் வேட்பாளர்கள், வியூகம் அமைத்த அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களின் பார்வையும் நாளை காலை வெளியாகவுள்ள தேர்தல் முடிவை நோக்கியே காத்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us