/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காகிதமற்ற நிர்வாக அமைப்பு புதுச்சேரி பல்கலையில் துவக்கம்
/
காகிதமற்ற நிர்வாக அமைப்பு புதுச்சேரி பல்கலையில் துவக்கம்
காகிதமற்ற நிர்வாக அமைப்பு புதுச்சேரி பல்கலையில் துவக்கம்
காகிதமற்ற நிர்வாக அமைப்பு புதுச்சேரி பல்கலையில் துவக்கம்
ADDED : ஜன 30, 2026 05:35 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், மின்னணு அலுவலகம் மூலம், காகிதமற்ற நிர்வாகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பு சேவைகள் தொடங்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் கணினி மையம் சார்பில், மின்னணு அலுவலகம் (காகிதமற்ற நிர்வாகம்) மேம்பட்ட இன்டர்காம் மற்றும் சி.சி.டி.வி., கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட ஐ.சி.டி., சேவைகள் துவக்க விழா நடந்தது.
துணைவேந்தர் பிரகாஷ் பாபு, கண்காணிப்பு அமைப்பு சேவையை துவக்கி வைத்தார்.
இயக்குநர், பதிவாளர், நிதி அலுவலர், தேர்வுகள் கட்டுப்படுத்துநர், நுாலகர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மின்னனு அலுவலக அமைப்பு, பல்கலைக்கழக நிர்வாகத்தில் செயல்திறன் மற்றும் காகிதமற்ற ஆட்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும். புதிய இன்டர்காம் அமைப்பு, போர்ட் பிளேர் (அந்தமான் & நிக்கோபார் தீவுகள்), காரைக்கால் மற்றும் லாஸ்பேட், மாஹே சமூகக் கல்லுாரிகள் ஆகிய துணை வளாகங்களுக்கு இடையிலான உள் தொடர்பை வலுப்படுத்தும்.
அதே நேரத்தில், சி.சி.டி.வி., கண்காணிப்பு அமைப்பு, வெள்ளி விழா வளாகத்தின், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

