/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத் துறையில் நிரந்தர பணி; பாராமெடிக்கல் மாணவர்கள் எதிர்பார்ப்பு
/
சுகாதாரத் துறையில் நிரந்தர பணி; பாராமெடிக்கல் மாணவர்கள் எதிர்பார்ப்பு
சுகாதாரத் துறையில் நிரந்தர பணி; பாராமெடிக்கல் மாணவர்கள் எதிர்பார்ப்பு
சுகாதாரத் துறையில் நிரந்தர பணி; பாராமெடிக்கல் மாணவர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 31, 2025 01:35 AM
புதுச்சேரி : சுகாதாரத் துறையில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என பாரா மெடிக்கல் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி அரசு, பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பி வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய துறைகளான போலீஸ், தீயணைப்பு, பொதுப்பணி, வருவாய், கல்வி உள்ளிட்ட துறைகளில் காலியிடங்களை கண்டறிந்து, நிரந்தர பணியிடங்களாக நிரப்பப்படுகிறது. மேலும் நிர்வாக துறையில் எல்.டி.சி., யூ.டி.சி., அசிஸ்டண்ட் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ஆனால் முக்கியத்துறைகளான சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் செவிலியர் பணியிடத்தை தவிர மற்ற அத்தியாவசிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
தற்போது சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகள் நிரப்ப விளம்பரங்கள் செய்யப்படுகிறது. சுகாதார துறையில் மருத்துவர் அல்லாது லேப் டெக்னீஷியன்கள், கண் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர்கள், சுகாதார உதவியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், மருந்தாளுநர்கள், டென்டல் ஹைஜீனிஸ்ட், எக்ஸ்ரே டெக்னீசியன், மற்றும் புதிதாக பயன்பாட்டுக்கு வந்துள்ள எம்.ஆர்.ஐ., இயக்குவதற்கு எம்.ஆர்.ஐ., டெக்னிஷியன் , கேத் லேப் டெக்னீஷியன், பிசியோதெரபிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட் , ஆடியாலஜிஸ்ட், டெக்னீஷியன் ஆகிய பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக நிரப்பிட போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவத்துறையில் விண்ணை தொடும் அளவிற்கு புதுச்சேரி உயர்ந்திருந்தாலும் மருத்துவம் சார்ந்த பயிற்சிகளை படித்து முடித்த மாணவர்களின் எதிர்காலம் ஒப்பந்த முறை வேலை வாய்ப்பால் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே அரசு, காலம் தாழ்த்தாமல் சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து பிரிவு காலி பணியிடங்களை நிரந்தர பணியிடமாக நிரப்பி, பாராமெடிக்கல் துறையில் பயிற்சி பெற்ற மாணவர்களின் வேலை வாய்ப்பு கனவை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.