/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் பொறியியல் கல்லுாரியில் ஹால்டிக்கெட் தராமல் அலைகழிப்பு கவர்னர், முதல்வரிடம் பெற்றோர் சங்கங்கள் புகார்

ADDED : டிச 26, 2024 05:37 AM
புதுச்சேரி: அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியில் தேர்வு எழுத ஹால்டிக்கெட் தராமல் அலைகழிப்பதாக கவர்னர், முதல்வரிடம் பெற்றோர் சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.
லாஸ்பேட்டை அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியில் சென்டாக் மூலம் 2022--23ம் கல்வி ஆண்டு முதல் மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இக்கல்லுாரி மாணவிகளுக்கு காமராஜர் கல்வி திட்டம் பொருந்தாது என்று, முழு கட்டணம் கட்ட சொல்லி நெருக்கடிகொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கவர்னர், முதல்வருக்கு பெற்றோர் சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.
சென்டாக் மாணவர் பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி அனுப்பியுள்ள புகார் மனு; கல்லுாரியில் சேரும் போது காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம் இந்த கல்லுாரிக்கு பெருந்தாது என, கூறாமல், 2022--23 மற்றும் 2023--24 ஆண்டு மாணவர்களை கல்லுாரியில் சேர்த்துவிட்டது. தற்போது கல்லுாரி நிர்வாகம் இந்த ஆண்டு 2024--25 முழு கல்வி கட்டணம் 40 ஆயிரத்து 266 ரூபாய் செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்று கூறி வருகிறது. இதனால் நாளை 27 தேதி முதல் நடக்க உள்ள தேர்வுக்கு ஹால்டிக்கெட் கொடுக்காமல் மாணவிகள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.
மாணவிகள் மனஉலைச்சலில் உள்ளனர். கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர், தலமைச்செயலாளர், கல்வித்துறை செயலாளர் ஆகியோர் இதில் தலையிட்டு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.