/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெற்றோர் - பயிற்சியாளர்கள் மோதல் லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் மூடல்; பயிற்சி பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு
/
பெற்றோர் - பயிற்சியாளர்கள் மோதல் லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் மூடல்; பயிற்சி பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு
பெற்றோர் - பயிற்சியாளர்கள் மோதல் லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் மூடல்; பயிற்சி பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு
பெற்றோர் - பயிற்சியாளர்கள் மோதல் லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் மூடல்; பயிற்சி பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு
ADDED : ஆக 02, 2025 06:44 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் பயிற்சி மைதானத்தில் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்துபோலீசார் மைதானத்தை பூட்டி வைத்துள்ளதால் மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானம் அருகே ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 20 ைஹமாஸ் விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில், தினசரி பல்வேறு ஸ்கேட்டிங் சங்கங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ரூ.1,800 கட்டணம் இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரோலர் ஸ்கேட்டிங் கிளப்பின் கீழ், 13 சங்கங்கள் உருவாகின. இச்சங்க நிர்வாகிகளில் 9 பேர், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர். இப்பயிற்சிக்கு ஒவ்வொரு மாணவருக்கும் ரூ1,500 முதல் 1,800 வரை கட்டணம் வசூலித்தனர்.
பயிற்சியாளர்கள் அலட்சியம் சங்க நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள், வயது வாரியாக மாணவர்களுக்கு நேரத்தை ஒதுக்கீடு செய்து பயிற்சி அளிக்காமல், ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கும்பலாக பயிற்சி அளித்தனர். இதனால் மாணவர்கள் பயிற்சியின் போது ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டு காயமடைந்து வந்தனர்.
மாணவர் படுகாயம் இதுகுறித்து மாணவர்களின் பெற்றோரின் முறையீடுகளை, சங்க நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன் இட நெருக்கடியில் மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டதில் ஒருவர் மாணவர் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதன் காரணமாக பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாக்குதல் இதன் காரணமாக, அந்த பயிற்சியாளர் சங்க நிர்வாகிகள் சிலரோடு, தமிழக பகுதியான மொரட்டாண்டிக்கு சென்று, அங்கு பயிற்சி மேற்கொண்ட மாணவரின் தந்தையை தாக்கியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மைதானம் மூடல் லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானத்தில் பெற்றோர், பயிற்சியாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அறிந்த லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன், கடந்த 24ம் தேதி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அனுமதியோடு, ஸ்கேட்டிங் மைதானத்தை பூட்டு போட்டு பூட்டினார்.
மைதானத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணைத்தில் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே, மைதானம் திறக்கப்படும் என இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். இதனால், கடந்த 8 நாட்களாக மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிர்வாக அதிகாரி விளக்கம் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாக அலுவலர் ஜெயசங்கர் கூறியதாவது:
லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் பயிற்சி மைதானத்தில், ரோலர் ஸ்கேட்டிங் விதிமுறைப்படி, ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே பயிற்சி பெற வேண்டும். பயிற்சியாளர், தேசிய விளையாட்டு ஆணையத்தின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறையை இங்குள்ள சங்கங்களும் பின்பற்றவில்லை. மாணவர்களின் பெற்றோர்களும் பின்பற்றவில்லை. இவர்களுக்குள் ஏற்பட்ட 'ஈகோ' வை மாணவர்கள் மத்தியில் புகுத்தியுள்ளனர்.
ஸ்கேட்டிங் மைதானம் வளையத்திற்குள் 20 பேர் மட்டுமே பயிற்சி பெற வேண்டும். ஆனால், இங்கு, 100 பேர் வரை பயிற்சி பெறுகின்றனர். இதனால் மாணவர்கள், ஒருவரோடு ஒருவர் மோதி காயமடைகின்றனர். இதனால், மாணவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக மைதானம் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு நடந்த சம்பவங்களை கேட்டறிந்த முதல்வர் ரங்கசாமி, ஸ்கேட்டிங் பயிற்சிக்கான விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விதிமுறைகளை கடைபிடிக்கும் மாணவர்களை மட்டும் மைதானத்தில் பயிற்சி பெற அனுமதிக்க உத்தரவிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகள் அதன்படி, மைதானத்தில் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். அதில் 6 முதல் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் மாலை 5:30 மணி முதல் 6:30 வரையிலும், 12 முதல் 15 வயதிற்கு உட்பட்டோருக்கு மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரையிலும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை பயிற்சி பெற ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும், ஸ்கேட்டிங் பயிற்சி பெறுபவர்கள், புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரமாக மாணவரின் ஆதார் கார்டு அல்லது பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டையுடன், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பதிய வேண்டும். பின்னர், மாதம் ரூ.50 கட்டணம் செலுத்தி பயிற்சி பெறலாம்.
இந்தவிதிகளை ஏற்கும் சங்க நிர்வாகிகள், ஸ்கேட்டிங் கிளப்பில் தொடர்ந்து செயல்படலாம். வேறு எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது. விரைவில் தேசிய விளையாட்டு ஆணையம் சான்றிதழ் பெற்ற முறையான பயிற்சியாளர் ஏற்பாடு செய்து பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
சங்க தலைவர் பேட்டி புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் கிளப் தலைவர் பழனி கூறியதாவது:
ஸ்கேட்டிங் மைதானத்தில் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து, ஸ்கேட்டிங் விளையாட்டில் மாணவர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று பரிசுகளை வெல்ல ஒத்துழைக்க வேண்டும். ஒரு சில கிளப் நிர்வாகிகள், பெற்றோர்களின் பிரச்னையால் மாணவர்களின் விளையாட்டு பாதித்துள்ளது. இதற்கு விரைவாக கூட்டம் கூட்டி, அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என கேட்டு கொள்ளவுள்ளோம். இதை மீறினால், பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடத்தி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.