ADDED : பிப் 17, 2024 11:29 PM

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், வேளாண் துறை சார்பில், கடந்த 9ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை மலர், காய், கனி கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் ஏராளமான மலர் செடிகள், காய்கள், பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் பார்வையிட்டார்.
அப்போது, அழகிய செடிகளை கொண்டு ஒவ்வொரு போலீஸ் நிலையத்தையும் அழகுப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதற்காக போலீஸ் நிதியில் இருந்து ஒரு போலீஸ் நிலையத்திற்கு ரூ.1000 வீதம், 25 போலீஸ் நிலையத்திற்கும் ரூ. 25,000 ஒதுக்கி மலர் ஜாடிகள் வாங்க உத்தரவிட்டார்.
மலர் கண்காட்சியில் அலங்கரித்த மலர் செடிகள், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் 50 ஜாடிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த செடிகள் போலீஸ் நிலைய வளாகத்திலும், வரவேற்பு பகுதிக்கு முன்னதாகவும் வைக்கப்பட்டுள்ளது.